முத்தாரம்மன் கோவிலில் கண்காணிப்பு கேமரா தொடக்க விழா

விஜய அச்சம்பாடு முத்தாரம்மன் கோவிலில் கண்காணிப்பு கேமரா தொடக்க விழா நடந்தது.

Update: 2023-01-04 18:43 GMT

இட்டமொழி:

இட்டமொழி அருகே உள்ள விஜயஅச்சம்பாடு முத்தாரம்மன் கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.

கோவில் தர்மகர்த்தா கோ.முத்துகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் தர்மகர்த்தா கோபால் நாடார் தொடங்கி வைத்தார். முன்னாள் தர்மகர்த்தாக்கள் வெள்ளத்துரை நாடார், சுப்பிரமணியன் நாடார், சு.முத்துகிருஷ்ணன் நாடார், தர்மகண் நாடார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்