கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு

மர்ம விலங்கு தாக்கி கடமான் பலியானது குறித்து கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2023-01-06 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்திற்குள் கடமான் ஒன்று இறந்து கிடப்பதாக தேவாலா வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடலூர் கோட்ட வன அலுவலர் ஓம்காரம் உத்தரவின்படி, தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனவர் பாலகிருஷ்ணன், வனகாப்பாளர் அருண்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது மர்மவிலங்கு தாக்கி ஆண் கடமான் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து எந்த வனவிலங்கு தாக்கி கடமான் இறந்தது என்பதை அறிய வனத்துறையினர் அப்பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினர். தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்