ரூ.15¾ லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

Update: 2023-07-27 17:12 GMT


வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. அதில் பொருளூர், கோத்தையம் தேனி, வேடசந்தூர் பகுதிகளைச் சேர்ந்த 44 விவசாயிகள் 619 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காங்கயம், முத்தூர், பூனாச்சி, காரமடை, நடுப்பாளையம், சித்தோடு, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.

அதில் நல்ல தரமான சூரியகாந்தி விதைகள் ஒரு கிலோ 55 ரூபாய் 39காசுக்்கும், இரண்டாம் தரமான சூரியகாந்தி விதைகள் 49 ரூபாய் 11 காசுக்கும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 781-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த தகவல்களை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்