முதன்முறையாக எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதை செய்த டாக்டர் குழுவுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2023-02-20 18:45 GMT

வால்பாறை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதை செய்த டாக்டர் குழுவுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நூற்றாண்டு ஆஸ்பத்திரி

வால்பாறையில் அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு, 108 ஆண்டுகளை கடந்து விட்டது. ஆரம்பத்தில் போதிய மருத்துவ ஊழியர்களுடன் செயல்பட்டாலும், நவீன மருத்துவ வசதி இல்லாமல் இருந்தது. அதன்பிறகு நவீன மருத்துவ வசதி ெகாண்டு வரப்பட்டபோதும், அதற்கு உரிய ஊழியர்கள் போதிய அளவில் நியமிக்கப்படாமல் இருந்தது. குறிப்பாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு டாக்டர் இல்லாமல் இருந்தது. இதனால் முதலுதவி சிகிச்சை அளித்து பொள்ளாச்சி, கோவைக்கு அனுப்பும் நிலை இருந்தது. தற்போது வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை டாக்டர் உள்பட போதிய மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

முதல் அறுவை சிகிச்சை

இந்த நிலையில் முதன் முறையாக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அதாவது, வால்பாறையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு விபத்தில் கை எலும்பு முறிந்தது. அவருக்கு, எலும்பு முறிவு பிரிவு டாக்டர் சரண், அறுவை சிகிச்சை செய்து தகடு வைத்தார். இதற்கு மயக்க மருந்து டாக்டர் சதீஷ், செவிலியர்கள் பத்மா, லில்லி, மலர் ஆகியோர் உதவியாக இருந்தனர். ஆஸ்பத்திரி தொடங்கி 108 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சரண் மற்றும் குழுவினருக்கு அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மகேஷ் ஆனந்தி மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பாராட்டுதெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்