கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவிலில் சூரசம்ஹாரம்

கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவிலில் சூரசம்ஹாரம்

Update: 2022-10-30 19:49 GMT

கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சூரசம்ஹாரம்

முருகன் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் சார்பில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலில் நேற்று நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட முருகன் உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள மும்முனை சந்திப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டார்.

இதையடுத்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் முருகன் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என ேகாஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.

போக்குவரத்து மாற்றம்

இதனால் தஞ்சை மெயின் சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் உத்தரவின் பேரில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்