அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம்
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.
ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று இரவு நடந்தது. இதில் முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.