முக்கூடலில் சூரசம்ஹார நிகழ்ச்சி
முக்கூடல் முத்துமாலை அமமன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
முக்கூடல்:
முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்துமாலை அம்மன் கோவிலில் மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை முன்னிட்டு கோவிலில் காலை, மதியம் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஊருக்குள் அமைந்துள்ள வளாகத்திலிருந்து மகிஷாசூரனை வதம் செய்ய ஆற்றங்கரைக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முத்துமாலை அம்மன் ரதம் புறப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தின் முன் மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்பாள் ரதம் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டு முக்கூடல் நகரை வலம் வந்து வளாகத்தை வந்தடைந்தது. முதல் முதலாக முக்கூடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முக்கூடல் இந்து நாடார் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.