சுரண்டை கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
சுரண்டை கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற் முழக்க போராட்டம் நேற்று மதியம் நடந்தது. அப்போது கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்க சுரண்டை கிளை தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஹரிஹரசுதன், பொருளாளர் மாரிச்செல்வி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் அரசாணை எண் 56-ஐ பயன்படுத்தி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு எழுத்துத் தேர்வை கைவிட்டு நேர்காணல் முறையை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 43 கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.