சுரண்டையில் புத்தக திருவிழா

சுரண்டையில் புத்தக திருவிழா கண்காட்சியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

Update: 2023-02-11 18:45 GMT

சுரண்டை:

சுரண்டையில் பொதுநல மன்றம், சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் மற்றும் சமூகநல இயக்கங்கள் சார்பில், சுரண்டை காமராஜர் மார்க்கெட் வணிக வளாகத்தில் 4-வது புத்தக திருவிழா கண்காட்சி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளி முருகன் தலைமை தாங்கினார். சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி நாட்டாமை எஸ்.தங்கையா நாடார், வியாபாரிகள் சங்க தலைவர் டி.காமராஜ், தொழிலதிபர் ரத்தினசாமி, சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் இரா.சின்னத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சிவகுருநாதபுரம் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், துணைத்தலைவர் கணேசன், காமராஜர் மார்க்கெட் சங்க நிர்வாகிகள் சேர்மசெல்வம், சரத் மாடசாமி, அறிவியல் இயக்கம் சுரேஷ்குமார், ஆசிரியர்கள் ஆரோக்கிய ராசு, ஜெயராம், சாதனா ரமேஷ், ஏ.டி.என். ரமேஷ் மற்றும் பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதில் 48 புத்தக அரங்குகள், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தினமும் மாலையில் பொது அறிவு போட்டி, வாசிப்பு திறன் ஊக்குவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்