சூரக்குடி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சூரக்குடி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட படைத்தலைவி நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து அதில் உள்ள காணிக்கை பணத்தை திருடி விட்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.