சூழல் தாங்கு மண்டலம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: வழக்கிடை மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

சூழல் தாங்கு மண்டலம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக வழக்கிடை மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-08-30 00:25 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வன உயிரின வாழ்விடங்களை சுற்றி அறிவிக்கப்பட்ட சூழல் தாங்கு மண்டலங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

சுப்ரீம் கோர்ட்டு பாதுகாக்கப்பட்ட வன உயிரின வாழ்விடங்களை சுற்றி அமைக்கப்படும் சூழல் தாங்கு மண்டலங்கள் தொடர்பாக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. சூழல் தாங்கு மண்டலங்களில் எந்தவொரு நோக்கத்திற்காகவும் புதிய கட்டுமானங்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளது.

தற்போது அளித்துள்ள தீர்ப்பால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு வழக்கிடை மனுவை உடனடியாக தாக்கல் செய்யவுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்