அரசு பள்ளிக்கு பெஞ்சுகள் வழங்கல்

ராதாபுரம் அரசு பள்ளிக்கு பெஞ்சுகள் வழங்கப்பட்டது.

Update: 2023-04-04 19:15 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி பயின்றனர். இதையடுத்து நம்மால் முடியும் குழு சார்பில் பள்ளிக்கூடத்துக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பெஞ்சுகளை தலைமை ஆசிரியர் ராஜகுமாரிடம் வழங்கினர். நம்மால் முடியும் குழு நிர்வாகிகள் ஏசுராஜன், ஆனந்த், லட்சுமணன், வார்டு உறுப்பினர் ஜான்துரை, இசக்கியப்பன், மணி, காமராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் எட்வின் செல்வகுமார், ஆசிரியைகள் சுபா, ஜான்சிராணி, ஜலஜா, பத்மினி, சுமத்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்