தூத்துக்குடி ஆயுத கிடங்கை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஆயுத கிடங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீசாரின் குறைகளையும் அவர் கேட்டறிந்ததார்.

Update: 2023-08-19 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஆயுத கிடங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீசாரின் குறைகளையும் அவர் கேட்டறிந்ததார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆயுத கிடங்கை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டார். அப்போது அங்கு ஆயுதங்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், ஆயுதப்படை வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தார்.

மேலும் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களிடம் குறைகள் இருந்தால் தன்னை நேரடியாக சந்தித்து எந்த நேரத்திலும் குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறினார். பின்னர் காவலர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

ஆரோக்கியமாக...

இதனை தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்து வந்த காவல்துறையினரின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை பார்வையிட்டு அவர்களுடன் கைப்பந்து விளையாடினார்.

பின்னர் அவர்களிடம், எவ்வளவு பணிகள் இருந்தாலும் உடற்பயிற்சியும் மிக முக்கியமானது, தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஓய்வு நேரங்களில் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். போலீஸ் நிலையங்களை நாடி வரும் பொதுமக்களிடம் கனிவான முறையில் நடந்து, அவர்களின் புகார்களை கேட்டறிந்து உயர் அதிகாரிகளின் அறிவுரைக்கேற்ப தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், தூத்துக்குடி ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்