விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

பேரணாம்பட்டில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-09-18 17:45 GMT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மொத்தம் 35 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. வழக்கமாக விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பத்தலப்பல்லி அணை பகுதியில் தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் மாற்று ஏற்பாடாக அருகிலுள்ள குயவன் குட்டையில் விநாயகர் சிலைகள் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேரணாம்பட்டு பகுதியில் விஜர்சன ஊர்வலம் செல்லும் பாதைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சிைலகள் கரைக்கப்படும் இடமான குயவன் குட்டையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விநாயகர் சிலைகள் குயவன் குட்டைக்கு எடுத்து செல்லும் சாலை சேறும் சகதியும்மாக இருந்ததை பார்த்த அவர் உடனடியாக அந்த பகுதியை மண்கொட்டி சீரமைத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து பத்தலப் பல்லி கிராமத்தில் இயங்கி வரும் போலீஸ் சோதனைச்சாவடி மற்றும் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்