போதைபொருள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு பிரசாரம்

போதைபொருள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

Update: 2022-08-24 17:11 GMT

ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு ரெயில் மற்றும் பஸ் பயணிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி, தங்கள் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் துண்டு பிரசுரத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தகவல் அளிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற பஸ்சில் ஏறி பயணிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு போதை பொருட்களை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பயணிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கினார். பின்னர் சந்தை கோடியூர் பகுதியில் நேற்று வாரச்சந்தை கூடியதால் அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்