போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகளை தணிக்கை செய்தார். இதையடுத்து குற்றங்களை குறைப்பது குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் அவர் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யோகானந்தம் உள்பட பலர் உடன் இருந்தனர்.