கோடை கால ஆக்கி பயிற்சி நிறைவு

குன்னூர் அருகே கோடை கால ஆக்கி பயிற்சி நிறைவு பெற்றது.

Update: 2023-06-02 22:00 GMT

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை கால ஆக்கி பயிற்சி முகாம் குன்னூர் அருகே அருவங்காட்டில் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கார்டைட் தொழிற்சாலை ஸ்போர்ட்ஸ் கிளப், அருவங்காடு ஆக்கி பயிற்சி மையம் சார்பில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்ட முன்னாள் விளையாட்டு அலுவலரும், ஆக்கி பயிற்சியாளருமான எச்.டி.குமார் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். அருவங்காடு கேந்திரிய வித்யாலயா பள்ளி, பாதுகாப்பு தொழிலாளர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த தலா 25 மாணவர்கள் மற்றும் பிற பள்ளிகளை சேர்ந்த 130-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றனர். கோடை கால ஆக்கி பயிற்சி முகாம் கடந்த 28-ந் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து நேற்று நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஆக்கி போட்டியில் கலந்துகொள்வது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி முதல்வர்கள் முன்னிலையில் பள்ளிகள் வாரியாக ஆக்கி போட்டி நடத்தப்பட்டது. அவர்களுக்கு நினைவு பரிசை ஆக்கி பயிற்சியாளர் எச்.டி.குமார் வழங்கி பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆக்கி விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்றார். பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பள்ளி முதல்வர்கள் பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்