இனாம் கரூர் கிளை நூலகத்தில் கோடை கால அடிப்படை கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பவித்ரா வரவேற்றார். கணினி பயிற்றுனர் ஐஸ்வர்யா, சரண்யா ஆகியோர் இல்லம் தேடி கல்வி மைய மாணவர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி வழங்கினர். இதில் எம்.எஸ்.வேர்டு, பவர் பாயிண்ட், பெயிண்டிங் பயிற்றுவிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் இ-மெயில் முகவரி புதிதாக தொடங்கப்பட்டது. முடிவில் செல்வ பிரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மோகன சுந்தரம் செய்திருந்தார்.