கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலையில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-24 12:22 GMT


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூன் மாதம் வரை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நடத்தப்பட உள்ளது.

10 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீச்சல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நீச்சல் பயிற்சி பெறலாம். மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உரிய நீச்சல் உடையினை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் 12 வேலை நாட்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நீச்சல் கற்றுக்கொள்பவர்கள் அனைவரும் அடிக்கடி சோப்பு அல்லது 70 சதவீதம் ஆல்காஹாலை கொண்ட சானிடைசரைப் பயன்படுத்த வேண்டும். சளி அல்லது இருமல் இருக்கும் பட்சத்தில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

காய்ச்சல், இருமல், தசை வலி, தலை வலி, அனோஸ்மியா போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் நீச்சல் குளத்தினை பயன்படுத்த அனுமதி கிடையாது.

மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணத்தில் நீச்சல் கற்று பயன்பெறலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அலுவலக வேலை நாட்களில் 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்