கோடை கால நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

வத்திராயிருப்பு பகுதிகளில் கோடை கால நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-02-06 19:42 GMT

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதிகளில் கோடை கால நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல் சாகுபடி

வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்தி கோவில் புதுப்பட்டி, கூமாபட்டி, எஸ்.கொடிக்குளம், நெடுங்குளம், ரஹ்மத் நகர், கிழவன் கோவில், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்ட்டு வருகிறது.

இந்தநிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது 7,400 ஏக்கரில் முதல் போக சாகுபடி செய்து நெல் அறுவடையை முடித்து விட்டனர். தற்போது கோடை கால நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் மும்முரம்

இதற்காக விவசாயிகள் நெல் நாற்றுக்கள் பாவியும் உள்ளனர். எனவே நெல் நாற்றுக்கள் தற்போது நாற்று நடுவதற்கு தயாராகி உள்ளதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் உள்ள வரப்புகளை ஒழுங்குப்படுத்தியும், டிராக்டர் மூலம் வயல்களை தொழி அடிக்கும் பணிகளிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்து வருகிறோம்.

கண்மாய்களில் தண்ணீர்

இந்தநிலையில் முதல் போக நெல் அறுவடையை முடித்து விட்டு தற்போது கோடை கால நெல் நாற்று நடவிற்கு வயலை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை பகுதிகளிலும், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் விவசாயத்திற்கு போதுமானதாக இருப்பதால் கோடை கால நடவு பணிகளை மேற்ெகாண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்