சென்னையில் குற்றால அருவி; கோடை கொண்டாட்டம் கண்காட்சி தொடங்கியது

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதையடுத்து சென்னை தீவுத்திடலில் கோடை கொண்டாட்டம் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-03 02:10 GMT

சென்னை:

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதையடுத்து சென்னை தீவுத்திடலில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கண்காட்சியை தி.மு.க. எம்.பி. வில்சன், திரைப்பட நடிகர் ரேடின் கிங்ஸ்லி ஆகியோர் நேற்று திறந்துவைத்தனர். இந்த கண்காட்சியில் நிரூற்றுடன் செயற்கை வடிவில் குற்றால அருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் குளிக்கலாம்.

மேஜிக் ஷோ, திகில் அரங்கம், ராட்டினம், பனிக்கூடு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, மும்பை வடபாவ் போன்ற திண்பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்களை கவரும் வகையில் அழகு சாதன பொருட்கள், ஆடை அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதிர்ஷ்ட விளையாட்டு, கம்ப்யூட்டர் ஜோதிடம், மீன் கண்காட்சி போன்ற அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டக சவாரியும் இருக்கிறது. இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் உண்டு. மேலும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், 'மேஜிக் ஷோ' போன்ற அரங்குகளை பார்வையிட தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று தொடங்கிய இந்த கோடை கொண்டாட்ட கண்காட்சி 45 நாட்கள் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்