முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது.

Update: 2023-08-05 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பில் 3,001 சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி மாலையில் அம்மன், சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து உலக நன்மை, குடும்பங்களில் அமைதி, நன்கு மழை பெய்து விவசாயம், வணிகம் செழிக்கவும், பெண்சக்தியின் பெருமை உயர்ந்திடவும் வேண்டி கோவில் கலையரங்கில் 3,001 சுமங்கலி பூஜை நடைபெற்றது.இதில் சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம், மாவட்ட பொறுப்பாளர் முத்துசெல்வி, உடன்குடி நகர இந்து முன்னணி நிர்வாகிகள் செந்தில்செல்வம், சிங்காரப்பாண்டி, ஆத்திசெல்வம், சுடலைமுத்து பட்டு, முத்துக்குமார் மற்றும் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்