சாலையோரம் கொட்டப்பட்ட சம்பங்கி பூக்கள்
சாலையோரம் கொட்டப்பட்ட சம்பங்கி பூக்கள்
அவினாசி
சாமிக்கு அணிவிக்க, திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து சுப விஷேசங்களிலும் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. மல்லிகை, முல்லை, செவந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது.
அதே சமயம் தற்போது சம்பங்கி பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால் அவற்றின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து விட்டது.
இந்த நிலையில் தனது தோட்டத்தில் விளைந்த சம்பங்கி பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவினாசி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் விரக்தியில் புதிதாக பறிக்கப்பட்ட சம்பங்கி பூக்களை அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் நால் ரோடு அருகே சாலையோரம் குவியல், குவியலாக கொட்டிச்சென்றுள்ளார்.