தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

காதலியிடம் பேசக்கூடாது என்றதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-01 19:46 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள வடக்கத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ராம்குமார் (வயது 25). இவர் உடற்பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரும், சிவகாசி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து பெண்ணின் தாய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராம்குமாரை அழைத்து, தனது மகளிடம் இனி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த ராம்குமார் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ராம்குமாரின் தாய் உமாபார்வதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்