தூக்க மாத்திரை தின்று நர்சு தற்கொலை முயற்சி
தூக்க மாத்திரை தின்று நர்சு தற்கொலைக்கு முயன்றார்.
தொண்டி,
தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தவர் தமிழ்செல்வி. இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். சம்பவத்தன்று தமிழ்செல்வி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் குடியிருப்பில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தமிழ்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.