தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

Update: 2022-12-12 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த ஒரு பெண் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அவரை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அ.மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த மாதம்மாள் என தெரியவந்தது. அவர் தனது உறவினரான ஒருவருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை திருப்பி தராமல் உறவினர் ஏமாற்றி வருவதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடனாக கொடுத்த தொகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்