பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள கூக்குட்டமரதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சிகுமார் (வயது 38) . கூலித்தொழிலாளி. இவரது முதல் மனைவி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து அவர், கஸ்தூரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். செஞ்சிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த செஞ்சிகுமார் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.