சலூன் கடை உரிமையாளர் விஷம் தின்று தற்கொலை

சலூன் கடை உரிமையாளர் விஷம் தின்று தற்கொலை

Update: 2023-06-21 11:52 GMT

காங்கயம்

காங்கயம் அருகே பரஞ்சேர்வழி நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது53). திருமணமான இவர் நால்ரோடு - கீரனூர் சாலையில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மாணிக்கத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதிலிருந்து மீளமுடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனமுடைந்த மாணிக்கம் கடந்த 19-ந்தேதி சலூன் கடையில் இருந்த எலி மருந்தை(விஷம்) சாப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கத்தின் குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி நேற்று காலைஉயிரிழந்தார். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

=================

Tags:    

மேலும் செய்திகள்