வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-06-15 19:30 GMT

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே உள்ள பசுவன்தொட்டியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 7-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சசிக்குமார் இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்