விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-06-10 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதல் தெருவை சேர்ந்தவர் சிவபாலன்(வயது 43). இவர் கோவையில் மனைவி சந்தியாவுடன் வசித்து வந்தார். அங்கு பெயிண்டர் வேலை செய்து வந்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் சிவபாலன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிவபாலன் உறவினர் திருமணத்திற்காக முதுகுளத்தூர் வந்தார். பின்னர் அவர் அப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்