தர்மபுரி கோல்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் கரண் (வயது 25). லேப் டெக்னீசியன். இவர் சொந்தமாக ரத்த பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் சில மாதங்கள் கழித்து பணம் தருவதாக கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த கரண் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீண்டும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கரண் உயிரிழந்தார். இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.