அரசு பள்ளி ஆசிரியர்விஷம் குடித்து தற்கொலை

கந்தம்பாளையம் அருகே நோய் பாதிப்பால் அவதிப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-21 18:42 GMT

கந்தம்பாளையம்

அரசு பள்ளி ஆசிரியர்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை சமத்துவ புரத்தில் வசித்து வருபவர் பழனி என்பவரின் மகன் செல்வராஜ் (வயது49). இவர் வாவிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மல்லிகா (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒருமகனும் உள்ளனர்.

இந்தநிலையில் செல்வராஜ் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் அவர் மனம் வேதனை அடைந்து இருந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் சம்பவத்தன்று செல்வராஜ் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் விஷம் குடித்து மயங்கிகிடந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நோய் பாதிப்பால் அவதிப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்