அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

ஓசூரில் குடும்ப தகராறில் அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-21 06:45 GMT

ஓசூர்

ஓசூரில் குடும்ப தகராறில் அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரசு பள்ளி ஆசிரியை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மரிபிரகாஷ். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 39). இவர், ஓசூர் சமத்துவபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீதேவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்