கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் அழகுஜோதி (வயது 64). இவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நோய் பாதிப்பால் மனமுடைந்த முதியவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.