மாற்றுத்திறனாளி வாலிபர் தற்கொலை
மாற்றுத்திறனாளி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை நகரை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் சசிகுமார் (வயது 26). மாற்றுத்திறனாளி. இவருக்கு முதுகு தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாததால் வீல்சேரில் சென்று வந்தார். இந்நிலையில் முதுகு தண்டுவட வலி அதிகமாக இருந்ததாலும், காலில் புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததில் வேதனை ஏற்பட்டதாலும் மனமுடைந்த சசிகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.