விசைத்தறி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பிள்ளை அருகே விசைத்தறி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-06 19:56 GMT

இளம்பிள்ளை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் மாதவராஜ் (வயது42). விசைத்தறி உரிமையாளர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாதவராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்