வெள்ளி பட்டறை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கொண்டலாம்பட்டி அருகே வெள்ளி பட்டறை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-02 19:54 GMT

கொண்டலாம்பட்டி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி ஆனந்த கோகிலா (24) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் கார்த்திக்குக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மன வருத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் கார்த்திக் வீட்டுக்கு வந்த போது மனைவியிடம் தோசை சுட்டு கொண்டு வரும்படி கூறிவிட்டு வீட்டின் மேல் மாடிக்கு சென்றவர் அங்குள்ள இரும்பு விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்