தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மூக்கனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல். தொழிலாளி. இவருடைய மகன் ஜெய்கணேஷ் (வயது 16). கடத்தூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் தேர்வில் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தந்தை அறிவுரை கூறியுள்ளார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெய்கணேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜெய்கணேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.