விஷம்குடித்து முதியவர் தற்கொலை
விஷம்குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
சாயல்குடி
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி ஊராட்சி ஆர்.சி.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேசமணி (வயது 70). சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.