தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-04-16 18:45 GMT

ராமநாதபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 73). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், இடதுகால் எடுக்கப்பட்டு, சிறுநீரக பாதிப்பு காரணமாக டயாலிசிஸ் செய்து வந்தார். இந்நிலையில் நோய் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த நடராஜன் நேற்று முன்தினம் தான் தங்கியிருந்த அறையின் அருகில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்