மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-04-15 19:00 GMT

காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி அருகே பாரூர் மோட்டுகொள்ளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 41). மேஸ்திரி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த குமரேசன் கடந்த 14-ந் தேதி விஷம் குடித்தார். அவரை மனைவி கலைவாணி மற்றும் உறவினர்கள் மீட்டு பாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி குமரேசன் இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்