விஷம் குடித்து ஜவுளி வியாபாரி தற்கொலை

கபிலர்மலை பகுதியில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-05 18:45 GMT

பரமத்திவேலூர்

ஜவுளி வியாபாரி

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 30). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் கடந்த 3 மாதங்களாக மது அருந்திவிட்டு ஜவுளி வியாபாரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இவரது மனைவி இதுகுறித்து கேட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஜெயக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று ஜெயக்குமார் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்