இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை உத்தங்குடி மந்தை அம்மன் கோவில் தெரு, மங்கல குடியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி மீனா (வயது 25). இவர் மூக்குப்பொடிக்கு அடிமையான நிலையில் அடிக்கடி பயன்படுத்தி வந்தார். அதனை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்தும் அவரால் அந்த பழக்கத்தை விடமுடியவில்லை. இதனால் அவருடைய மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறபப்டுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மீனா திடீரென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.