அஞ்செட்டி அருகே உள்ள கோரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (வயது 37). இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முனிகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி ரூபா (36) கொடுத்த புகாரின்பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர்.