காவேரிப்பட்டணத்தில்பிளம்பர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-03-17 19:00 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 24). பிளம்பர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவசங்கர் கடந்த 16-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்