இளம்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி தாலுகா வெலவர்த்தி அருகே உள்ள தின்னூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி அன்பரசி (வயது23). இவர் சின்ன கொட்டப்பள்ளியில் வசித்து வந்தார்.இவர்கள் காதலித்து 4½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்கள் கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு சின்ன கொட்டப்பள்ளியில் உள்ள வீட்டில் அன்பரசி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி விசாரணை நடத்தி வருகிறார்.