கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
பேரிகை அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்
பேரிகை அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள எஸ்.தட்டனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது25). கூலித்தொழிலாளி. இவர் அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து பெண் பார்த்து வைத்து இருந்தனர்.
இதனிடையே கடந்த 3 மாதத்திற்கு முனிராஜின் தந்தை நஞ்சப்பா இறந்து விட்டார். இதனால் முனிராஜ் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று காலை அவரது உடல், அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மிதந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தந்தை இறந்த சோகத்தில்...
இதுகுறித்து பேரிகை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முனிராஜ் தந்தை இறந்த சோகத்தில் மது குடித்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.