பழனி தங்கும் விடுதியில் கேரள முதியவர் தற்கொலை

பழனியில் தங்கும் விடுதியில், கேரள முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-02-25 21:00 GMT

பழனி பஸ்நிலையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக பழனி டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேந்தர் (வயது 60), கோட்டயம் என முகவரி கொடுத்து நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கிய அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இறந்தவர் கொடுத்த முகவரி உண்மையானதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்