பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

பர்கூர் அருகே ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-24 18:45 GMT

பர்கூர்

பர்கூர் அருகே ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகன் கவுதம் (வயது 17). இவர் சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவர் தனது வகுப்பு ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளி ஆசிரியர்கள், மாணவரின் பெற்றோரை வரவழைத்து நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு சென்ற பெற்றோர் மாணவர் கவுதமிடம் ஆசிரியரை அவ்வாறு பேசக்கூடாது என கண்டித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மணமுடைந்த கவுதம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்