பெற்றோர் பேசாததால் இளம்பெண் தற்கொலை
போச்சம்பள்ளி அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பேசாததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்
போச்சம்பள்ளி அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பேசாததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள முருக்கம்பட்டியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ஷோபா (வயது 19). இவர்கள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஷோபாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய பேசி வைத்து இருந்தனர்.
இந்த நிலையில், ஷோபா தமிழரசனை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் ஷோபாவிடம் பேசவில்லை. மேலும் தனக்கு சொந்தமாக செல்போன் இல்லாததால் பெற்றோரிடம் செல்போன் மூலம் பேச முடியாத நிலையில் ஷோபா இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
விசாரணை
இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்ட ஷோபா முருக்கம்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதைகண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷோபா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 8 மாதங்களுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.